Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஏன் மலேசிய ரிங்கிட்டைவிட சிங்கப்பூர் வெள்ளி வலுவாக இருக்கிறது?

வாசிப்புநேரம் -
ஜொகூரிலிருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலை செய்ய வருகின்றனர்.

அங்குள்ள காப்பிக் கடைகளிலும் உணவகங்களிலும் மனிதவளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதற்குக் காரணம்?

சிங்கப்பூரின் வெள்ளி வலுவடைந்து வருவதுதான்.

எதனால் அவ்வாறு நிகழ்கிறது?
படம்: AP Photo/Vincent Thian

உள்ளூர் அம்சங்கள்

💸அரசியல் நிலையற்றதன்மை

💸 முரண்பாடான கொள்கைகள்

அண்மையில் மலேசியாவின் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

அதன் முடிவுகள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சியா வாய் முன் (Chia Wai Mun) TODAY-இடம் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பு பெரிக்கத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணி கெடா, கிளந்தான், திரெங்கானு (Kedah, Kelantan, Terengganu) போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து அதன் வசம் தக்கவைத்துள்ளது.

ஆளும் பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணியும் தேசிய முன்னணியும் (Barisan Nasional) இணைந்து அவற்றின் வசம் வைத்துள்ள பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் (Penang, Selangor and Negri Sembilan) ஆகிய மாநிலங்களில் எதிர்த்தரப்பின் நிலை சற்று வலுவடைந்துள்ளது.

இது போன்ற அரசியல் மாற்றங்கள், முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடுமெனத் திரு. சியா கூறினார்.

அது மலேசிய நாணயத்தையும் பாதிக்கும் என்றார் அவர்.

படம்: AFP

வெளிநாட்டு அம்சங்கள்

💸 பொருள் விலைகளில் மாற்றங்கள்

ரப்பர், செம்பனை எண்ணெய் ஆகியவற்றைப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்துவருகிறது மலேசியா.

அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெரும்பகுதி பொருள் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கிறது.

பொருள் ஏற்றுமதியை நம்பியிருக்கும் நாடுகளின் தேசிய நாணயப் பரிவர்த்தனை விகிதம் பொருள்களின் விலைக்கேற்ப மாறுபடும் என்று நிபுணர் ஒருவர் The Star செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட நாட்டின் வெளிநாட்டுக் கடன் அதிகமாக இருந்தால், நாடு எவ்வாறு அந்தக் கடனைச் செலுத்தப்போகிறது என்ற சந்தேகம் எழும்.

அதனால் முதலீட்டாளர்கள் நாணயத்தை விற்கலாம்.

அது நாணயத்தை வலுவிழக்கச் செய்யும்.

💸 வட்டி விகிதம்

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க மத்திய வங்கி (U.S. Federal Reserve), வட்டி விகிதத்தை நீண்ட காலத்துக்கு அதிகமாக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே, அமெரிக்க டாலர் வலுவடைந்தது.

சிங்கப்பூரிடம் வட்டி விகிதத்திற்கெனக் குறிப்பிட்ட கொள்கை இல்லை என்றார் திரு. Maybank வங்கியின் நாணயப் பரிவர்த்தனை நிபுணர் சக்தியாண்டி சுப்பாஆட் (Saktiandi Supaat).

இங்குள்ள வட்டி விகிதம், சந்தையைச் சார்ந்திருப்பது..

அமெரிக்க வட்டி விகிதத்தோடு பிணைக்கப்பட்டிருப்பது..

சிங்கப்பூர் நாணய வாரியத்தின் பணக் கொள்கை நாணயப் பரிவர்த்தனை விகிதத்தையொட்டியது.

வலுவடைந்துவரும் அமெரிக்க டாலரிடமிருந்து சிங்கப்பூர் வெள்ளியைப் பாதுகாக்க அது உதவுகிறது என்று திரு. சக்தியாண்டி CNAயிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர்ப் பொருளியல் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை வளர்வதால், சிங்கப்பூர் வெள்ளி, மலேசிய ரிங்கிட்டைவிட வலுவடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய நிலவரப்படி (செப்டம்பர் 7), 1 சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 3.44 ரிங்கிட்.

தென்கிழக்காசியாவில் இவ்வாண்டு ஆக மோசமான நிலையில் இருக்கும் நாணயம், மலேசிய ரிங்கிட் என்று Reuters கூறியுள்ளது.

ரிங்கிட்டை நிலைப்படுத்த வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைச் சந்தையில் தலையிடவிருப்பதாய் மலேசிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்