Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் அதிபர் தேர்தல் - அதிபராகும் தற்போதைய துணையதிபர்

வாசிப்புநேரம் -
தைவான் அதிபர் தேர்தலில் தற்போதைய துணையதிபரும் ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளருமான திரு. வில்லியம் லாய் (William Lai)வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் 5 மில்லியனுக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

அந்த எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றுள்ள முதல் அதிபர் தேர்தல் வேட்பாளர் அவர் என்று கூறப்படுகிறது.

90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், மற்ற இரண்டு வேட்பாளர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குவோமிந்தாங் (Kuomintang) கட்சியின் ஹோ யு இ (Hou Yuih), தைவான் மக்கள் கட்சியின் கோ வென் ஜி (Ko Wenje) ஆகியோர் அவர்கள்.

திரு. ஹோ திரு. லாய்க்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் சவால்களை எதிர்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்றத்தின் 113 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் இன்று வாக்களிப்பு நடைபெற்றது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்