ஆப்கானிஸ்தானில் மாதர் உரிமைகள் மேலும் குறைப்பு
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.
பசுமைப் பகுதிகள் நிறைந்த உணவகங்களில் உணவருந்துவதற்குப் பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது.
தற்போதைக்கு நாட்டின் வடமேற்கே உள்ள ஹீராட் (Herat) மாநிலத்துக்கு மட்டுமே அந்தத் தடை பொருந்தும். ஆண்களும் பெண்களும் கலந்துறவாடுவதைத் தடுக்கவே அந்த நடவடிக்கை என்று அதிகாரிகள் கூறினர்.
பெண்கள் முக்காடு அணியவில்லை என்றாலும் முறையாக அணியாவிட்டாலும் அதிகாரிகள் அவர்களைப் பிடித்துத் தண்டனை கொடுக்கின்றனர்.
தலிபான் அமைப்பு 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு, பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. அத்தியாவசியமான வேலைகள் தவிர்த்த மற்ற அரசாங்க வேலைகளில் இருந்தும் அவர்கள் அகற்றப்பட்டனர்.
பெண்கள் மீது விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகளை ஐக்கிய நாட்டு நிறுவனம் கண்டித்துள்ளது. கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், அத்தகைய கட்டுப்பாடுகள் மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் என்று அது சாடியது.