Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கத்தாரில் சூடு பிடிக்கும் ஒட்டகச் சவாரி - அசந்துபோய் அசைய மறுக்கும் ஒட்டகங்கள்

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளைக் காண ரசிகர்கள் பலர் கத்தாரில் குவிந்துள்ளனர். 

போட்டிகளைக் காண ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் ஒட்டகச் சவாரி செல்லவும் அவர்கள் விரும்புகின்றனர். 

ஒட்டகச் சவாரி வழங்கும் நிறுவனங்கள் தினந்தோறும் கிட்டத்தட்ட 1,000 ஒட்டகச் சவாரிகளை அளிப்பதாகக் கூறுகின்றன.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன், அந்த எண்ணிக்கை 20 ஆக மட்டுமே இருந்தது.  

அதனால் ஒட்டகங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாய் நிறுவனங்கள் கூறியுள்ளன. 

இருப்பினும் சவாரிக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஒட்டகங்கள் அளவுக்கு மீறி வருத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. 

ஆகையால் அவ்வப்போது அவை தரையை விட்டு எழுந்திருக்க மறுக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, சவாரி செல்லும் பயணிகள் குதூகலமாக இருக்கின்றனர். 

"ஒட்டகச் சவாரியில் செல்ல வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் பயணம் செய்யும்போது, ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் போன்ற உணர்வு ஏற்படுகிறது," 

என்று ஒட்டகச் சவாரியைப் பெரிதும் விரும்பிய ஒருவர் கூறினார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்