Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: சின்ஜியாங் சென்றுள்ள ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரிக்கு நெருக்குதல்

வாசிப்புநேரம் -

சீனாவின் சின்ஜியாங் வட்டாரத்துக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷெல் பாஷலேக்கு நெருக்குதல் அளிக்கப்படுள்ளது.

அந்த வட்டாரத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த அட்டூழியங்கள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் காட்டும் நிழற்படங்களும் ஆவணங்களும் அண்மையில் கசிந்தன.

வீகர் முஸ்லிம் சமூகத்தினருக்கு மறுகல்வி அளிக்கத் தடுப்புக்காவல் நிலையங்களைச் சீனா நடத்துவதாகவும் அங்கிருந்து தப்பிக்க முயல்வோர் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் அந்த ஆவணங்கள் குற்றஞ்சாட்டின.

அந்த நிலையங்களில்  1 மில்லியனுக்கும் அதிகமானோர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக ஆர்வலர்கள் கூறினர்.

சீனா அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது.

பொய்த்தகவல் என்று தான் கூறுவதைத் திருவாட்டி பாஷலேயின் வருகை தெளிவுபடுத்தும் என்று பெய்ச்சிங் நம்பிக்கை தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்