Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் சீனா

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நெருங்குவதால், போக்குவரத்து நெரிசலையும், காற்றுத்தூய்மைக் கேட்டையும் கட்டுப்படுத்த சீனா பெரும் முயற்சி மேற்கொள்கிறது. 

இந்தக் காலத்தில் வழக்கமாக பெய்ச்சிங் புகை மூட்டமாகக் காணப்படும். போட்டிகள் தொடங்க 3 வாரமே உள்ளதால்  நிலைமையை மாற்ற அது விரும்புகிறது. 

எரிபொருள் வாகனங்கள், கட்டுமானக் கழிவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து 
அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க வாகனங்களின் பயன்பாட்டு விகிதம் 80 விழுக்காடு குறைக்கப்படும். 

சாலைகளில் மார்ச் வரை ஒலிம்பிக் சேவை வாகனங்களுக்காகச் சிறப்புத் தடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. 

குளிர்கால ஒலிம்பிக்கும், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக்கும் நடைபெறும்போது புதிய விதிமுறைகள் நடப்பிலிருக்கும்.

-Reuters/gr

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்