Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

ஒவ்வாமை - இதுபற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

வாசிப்புநேரம் -
ஒவ்வாமை - இதுபற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

(படம்: ரத்னம் ஒவ்வாமை, சரும சிகிச்சை நிலையம்)

ஒவ்வாமை...

சில உணவுப் பொட்டலங்களில் இருக்கும் ஒவ்வாமை குறித்த எச்சரிக்கையை எத்தனை பேர் கவனித்திருப்போம்?

ஒவ்வாமையால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

housemite... தூசியில் உள்ள பூச்சிகள். சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினருக்கு இந்தப் பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படுகிறது. எனினும் அனைவரிடமும் அதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.

40 விழுக்காட்டினர் சுவாசப் பிரச்சினையால் அவதியுறுகின்றனர்.

சிங்கப்பூரில் பிறக்கும் 50 விழுக்காட்டுப் பிள்ளைகள் ஏதோ ஒரு வகை ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். 

புதிதாக உணவு வகைகளை ருசித்துப் பார்த்த பிறகு பிள்ளைகளின் உடலிலோ சுகாதாரத்திலோ மாற்றங்கள் ஏற்பட்டால் ஒவ்வாமைக்கான பரிசோதனையைச் செய்துபார்க்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

சுமார் 15 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் பரிசோதனை குறித்து விளக்குகிறார், தேசியப் பல்கலைக் கழகச் சுகாதாரப் பிரிவின் மூத்த ஆலோசகரும் மருந்தக இயக்குநருமான டாக்டர் சோமா சுப்ரமணியம்.

01:08 Min

குழந்தைப் பருவத்தில் இல்லாத ஒவ்வாமை,  நான்கில் ஒருவருக்குப் பெரியவரானதும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளவும் தடுக்கவும் மேலும் ஆய்வுகள் அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து.

மேலும் தெரிந்துகொள்ளலாம், இன்றிரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியில்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa