நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ள பழம்பெரும் இடங்கள்
நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ள பழம்பெரும் இடங்கள்

படங்கள்: சிவா மகேந்திரன்
நாம் வசிக்கும் வட்டாரத்தில் நமக்கென பிடித்த பகுதிகள் நிச்சயம் இருக்கும். வேறு வட்டாரத்துக்கு மாறிச் சென்றாலும் அந்த இடங்களின் நினைவுகள் ஒருபோதும் அழிவதில்லை. மீண்டும் அந்த வாழ்க்கை வராதா என்ற ஏக்கம் ஒருசிலருக்கு வரக்கூடும்.

சிங்கப்பூரில் உள்ள பல பழைமையான கட்டடங்கள் இன்னமும் பாதுகாக்கப்படுகின்றன.
குடியிருப்பு வட்டாரங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்க மரபுடைமைப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்குப் பிறந்து வளர்ந்தவர்கள் ஏராளம். அவர்களில் சிலரின் இனிமையான அனுபவங்களைக் கேட்டறிய ஆவலா?
வசந்தம் ஒளிவழியில் இன்றிரவு ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்.