Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

குடும்பங்களைக் கொண்டாடும் ஆண்டு... என்ன எதிர்பார்க்கலாம்?

வாசிப்புநேரம் -

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

அன்பு, அக்கறை, பணிவன்பு, ஒழுக்கம், பொறுமை, பொறுப்புணர்ச்சி எனப் பல்வேறு பண்புகளுக்கு அடித்தளமிடுவதில் பெரும் பங்காற்றுகின்றன குடும்பங்கள்.

ஒற்றுமையான குடும்பங்கள் வலுவான சமூகத்தை உருவாக்குகின்றன.

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சகோதர-சகோதரிகள் எனப் பல்வேறு உன்னதமான உறவுகளைக் கொண்டாடும் சிறப்பான ஆண்டாக 2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் பொன்னான நேரத்தைச் செலவிட ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஒருகாலத்தில் அதிகமானோர் கூட்டுக்குடும்பங்களில் வாழ்ந்தனர்.

தற்போது, பெற்றோருடன் பிள்ளைகள் மட்டுமே வசிக்கும் சூழல்தான் பெரும்பாலும் உள்ளது.

சொந்தங்களுடன் ஆரோக்கியமான உறவை நிலைக்கச் செய்வதற்கான வழிகளை ஆராய உதவுகின்றன ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள்.

படம்: சக்திசரவணன் கருப்பையா

" என் குடும்பம் எந்தச் சூழலிலும் என்னைக் கைவிடாது."

தாத்தா, பாட்டி, சகோதரர்களுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் ஜூன் மாதம் வரை இடம்பெறும்.

படம்: விஜயகுமார் A வள்ளிக்கண்ணு-ராமாயி அந்தோனி

" யீஷூன் தாத்தா வந்துவிட்டார் என உற்சாகத்தோடு பேத்தி வந்து கட்டிப்பிடிப்பார். நாங்கள் பாட்டுப் பாடி கதைகள் பேசி மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவோம்!"

குடும்பங்களுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றும் வேலை இடங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சிகள் செப்டம்பர் வரை நடத்தப்படும்.

படம்: ராஜ்குமார் பெருமாள் சுப்பையா, இயக்குநர்

" மகிழ்ச்சியான ஊழியர்கள் சிறப்பாகப் பணிபுரிவார்கள்!"

அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை, மூப்படையும் சமூகத்தினருக்கும் பல்வேறு தலைமுறைகளைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கும் கூடுதல் ஆதரவளிக்கும் பல முயற்சிகள்.

படம்: நபிலா முகம்மது ஆரிப்

" நாங்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் அம்மா என் பிள்ளையைக் கவனித்துக்கொள்கிறார். பேரனுக்குப் பாட்டியின் துணை இருப்பது எங்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது."

படம்: முகம்மது அப்துல் ஹமீது-நசிஹா பேகம் ஹாஜா மைதீன்

"நாங்கள் அதிகமாகக் காற்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளின்வழி எங்கள் மகன்களுக்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்கிறோம்."

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஏட்டுக்கல்வி மட்டும் ஒருவருக்குப் போதாது.
ஒழுக்கம், பரிவு போன்ற பண்புகளைப் புகட்டும் குடும்பச் சூழலும் முக்கியம்.

அதனை இன்றைய பெற்றோர் எவ்வாறு உருவாக்கித் தருகின்றனர்? குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குவதற்கான போதிய ஆதரவு வேலையிடங்களில் கிடைக்கிறதா? இவற்றுக்கான பதில்களுடன் வசந்தம் ஒளிவழியில் இன்றிரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது எதிரொலி.

மேல் விவரங்களுக்கு : https://familiesforlife.sg/
 

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்