Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

உயரும் கடல் நீர்மட்டத்தினால் நேரக்கூடிய ஆபத்து!

வாசிப்புநேரம் -

பருவநிலை நெருக்கடி என்பது உலகமே எதிர்கொள்ளும் ஓர் உடனடிச் சவால்.

உலகளாவிய கடல் நீர்மட்டம் எதிர்பாராத அளவிற்கு ஆண்டுதோறும் உயர்ந்துவருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அது 3.6 மில்லிமீட்டர் உயர்வதாக ஆய்வு ஒன்று காட்டுகிறது.

இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளப் பேராசிரியர் திரு. பெஞ்சமின் ஹோர்டனை (Benjamin Horton) எதிரொலிக் குழு சந்தித்தது. உலகம் எதிர்நோக்கக்கூடிய விளைவுகளை அவர் விவரித்தார்.
 

“தற்போது 3000 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத வகையில் கடல் மட்டம் வேகமான உயர்ந்துவருகிறது. உயரும் கடல் மட்டத்தினால் விவசாய வயல்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும். அதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, நம் நீர் நிலைகள் மாசுபடுகின்றன. புயல்களின் வேகம் அதிகரிப்பதுடன் அவை அடிக்கடி ஏற்படக்கூடும்.” என்று திரு. ஹோர்டன் கூறினார்.
 

உலக அளவில் இன்னும் 70 ஆண்டுகளில் அதாவது
2150-ஆம் ஆண்டில் கடல் நீர்மட்டம் அதிகபட்சமாக
5 மீட்டர் உயரலாம் என்று பேராசிரியர் எச்சரித்தார்.

இதனைச் சமாளிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசாங்கம் இறங்கியுள்ளது.

புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள் கடல் நீர்மட்டத்தைவிடக் குறைந்தது 4 மீட்டர் உயரமாக இருக்கவேண்டியது கட்டாயம்.

மேலும் 100 மில்லியன் வெள்ளி செலவில் சிங்கப்பூரின் கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியும் தொடங்கியுள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட், லிம் சூ காங், சுங்கை காடுட், ஜூரோங் தீவு முதலியவற்றைச் சுற்றி அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அது, உயர்ந்துவரும் கடல் நீர்மட்டத்திலிருந்து அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பளிக்கும்.
 

ஆனால் இவை மட்டும் போதுமா? பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் நடப்பில் உள்ளன.

மின் வாகனங்கள் மூலம் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பது மற்றும் மின்-தகடுகள் மூலம் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலிருந்தும் பசுமையான மின்சாரத்தைப் பெறுவது ஆகியவையும் அதில் அடங்கும்.

இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள எதிரொலி நிகழ்ச்சியின் நீடித்த நிலைத்தன்மை இரண்டாம் பாகத்தை இன்றிரவு காணத்தவறாதீர்கள்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்