Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூரின் கடல்துறை...கலங்கரை விளக்கங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..

கலங்கரை விளக்கங்கள்…

வாசிப்புநேரம் -

கலங்கரை விளக்கங்கள்…

சிங்கப்பூரில் எத்தனை இருக்கின்றன? அவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?

போர்ட் கேனிங், புல்லர்ட்டன், பிடோக் போன்ற சில இடங்களில் இன்னமும் கலங்கரை விளக்கங்களைக் காணலாம்.

அவற்றின் மாதிரிகள் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

கலங்கரை விளக்கங்களைத் தாள்வடிவில் செய்துபார்ப்பதற்கான வாய்ப்பும் அங்கு உள்ளது.

கடல்துறைக் கண்காட்சியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு அதிகாரி நித்திய பிரியதர்ஷிணி அதனை எவ்வாறு செய்வது என்று எதிரொலியின் படைப்பாளர் ரஞ்சனிக்குக் கற்றுக்கொடுத்தார்.

(படம்: அபிடா பேகம்)

1819இல் சிங்கப்பூர் வரியற்ற துறைமுகமானது.

அன்றிலிருந்து இன்றுவரை சிங்கப்பூரின் நாடித்துடிப்பாக விளங்கிவருகிறது கப்பல்துறை வணிகம்.

உலகின் தலைசிறந்த கடல்துறை நிலையம் என்ற பெயரை 8 ஆண்டாகச் சிங்கப்பூர் கட்டிக்காத்து வருகிறது.

(படம்: அபிடா பேகம்)

நம் நாட்டின் கப்பல்துறை சிறந்துவிளங்க ஊழியர்கள் எவ்வாறு பங்களித்துள்ளனர்?

கப்பல்துறை கடந்த 25 ஆண்டாகக் கண்டுள்ள மாற்றங்கள் யாவை?

இதுபோல மேலும் பல தகவல்கள்.
இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பாகவுள்ள எதிரொலி நிகழ்ச்சியில். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்