Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அண்டை வீட்டிலிருந்து வரும் சிகரெட் புகையால் தொல்லை... ஆராயும் 'எதிரொலி'

வாசிப்புநேரம் -

வழக்கமாகப் புகைபிடிக்கும் பழக்கமுள்ளோர், வீட்டின் ஒரு பகுதியை அதற்காகப் பயன்படுத்துவர்.

ஆனால் சிகரெட்டிலிருந்து வெளிவரும் புகை சுமார் 100 மீட்டர்வரை பரவக்கூடும்... சன்னல் வழியே பக்கத்துவீட்டுக்குள்ளேயும் நுழைந்து மற்றவர்களின் நிம்மதியைக் கெடுக்கும்.

அது மட்டுமா? பல உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

சிகரெட் புகையிலிருந்து வரும் புகை, புகைபிடிப்பவர் ஊதித்தள்ளும் புகை... இவற்றை ஐந்து நிமிடங்கள் சுவாசித்தாலே போதும்! தலைவலி, தொண்டைவலி போன்ற பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

வீட்டில் புகைபிடிப்பதைத் தடை செய்ய எந்தவொரு சட்டமும் தற்போது நடப்பில் இல்லை. அண்டை வீட்டிலிருந்து வரும் சிகரெட் புகையை எப்படிச் சமாளிப்பது?

புகையில்லா சுத்தமான காற்றைச் சுவாசிப்பது நமது உரிமை.

அதை உறுதிசெய்வது எப்படி?

வசந்தத்தில் இன்றிரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்