Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

"சமூகத்தோடு ஒன்றிணைய உதவும் வீடுகள் "

வாசிப்புநேரம் -

திருமண வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு, வேலை, வீடு என ஆண்டுகள் உருண்டோடும்.

pictures on wall
பிள்ளைகளும் திருமணம் முடித்து அவரவர் சொந்த வீடுகளுக்குக் குடிபுகும் நேரம் வரும்.

பெரிய வீட்டில் பிள்ளைகளோடு கலகலவென சுறுசுறுப்பாகக் காலத்தைக் கழித்த பெற்றோர் இப்போது அமைதியான சூழலில் ஓய்வெடுக்க விரும்பலாம்.

சிங்கப்பூரில் எப்போதுமே மூப்படையும் சமூகத்தினர்மீது அதிக அக்கறை செலுத்தப்படுகிறது.

மூத்தோருக்கான சிறப்பு வீட்டுத் திட்டங்களில் ஒன்று, ஸ்டூடியோ வீடு.

அத்தகைய வீடுகள் அமைந்திருக்கும் வட்டாரங்களில் ஒன்று ஜூரோங் வெஸ்ட்.

பல ஆண்டுகளாக இங்கு வசிக்கிறார் தனலட்சுமி.
mdm thanaletchmi

பெரிய வீட்டை விற்று இந்த இல்லத்துக்கு இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் குடிபுகுந்தார்.

studio

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வசதிகளோடு அமைந்த வீடு இது.

உதவி தேவைப்பட்டால் வீட்டில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் (wires) கம்பிகளைப் பயன்படுத்தலாம்.  
bars
மின்தூக்கி அருகே இருக்கும் பலகை.
ஒலிக் கருவி வழி யாருக்கு உதவி தேவைப்படுகிறது எனப் பிறருக்குத் தெரியவரும்.
monitor
கண்காணிப்புக் கருவிகள், அடிக்கடி தம்மை நலம் விசாரிக்கும் அண்டை வீட்டார், சுற்றியிருக்கும் கடைகள், மருந்தகம் எனப் பல வசதிகள் இருப்பதாகக் கூறுகிறார் தனலட்சுமி.

எனக்குப் பிடித்ததுபோல அங்கும் இங்கும் பூந்தொட்டிகள், அலங்காரங்கள் போன்றவற்றை வைத்திருக்கிறேன். சிறிதாக இருந்தாலும் என் வீட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்.

- தனலட்சுமி

இத்தகைய வீடுபோல எதிர்காலத்தில் பராமரிப்பு இல்லங்கள் வரவிருக்கின்றன. இப்படி பல வகையான வீடுகள் சிங்கப்பூரில் உள்ளன.
blocks
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் இடமாக மட்டுமல்ல...சமூகத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும் இடமாகவும் குடியிருப்பு வட்டாரங்கள் மாறிவருகின்றன.
அவற்றுக்கேற்ப வீடுகளின் அமைப்பும் மாற்றம் கண்டுள்ளது.
இதுபோன்ற தகவல்களை மேலும் அறிய இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தம் ஒளிவழியில் ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்