Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

எதிர்காலச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க இன்றே செயலில் இறங்கவேண்டும் - இளையர்கள்

வாசிப்புநேரம் -

சிறு வயதில் உடல் பருமனாக இருக்கும்போது பலர் பெரும்பாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.அப்படித்தான் வெற்றியும் இருந்தார். 32 வயதாகும் அவரின் உடல் எடை இப்போது 91 கிலோகிராம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அது 165 கிலோவாக இருந்தது.

நிறையச் சிரமப்பட்டேன். எனக்குப் பிடித்த நடனத்தைச் சரியாக மேடையில் ஆடமுடியாது. முதுகு வலி அடிக்கடி வரும். மூச்சு வாங்கும். வீட்டில் பெற்றோருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருக்கிறது அதெல்லாம் எனக்கும் வந்துவிடும் என்ற ஒரு பயம் வந்தது. வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்தேன். இப்போது 75 கிலோகிராமுக்கு மேல் குறைத்துவிட்டேன்

- வெற்றிவேலன், 39

வயதாகும் சசிதரனின் கதையோ சற்று வித்தியாசமானது. 16 வயதில் நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. இன்று அவருக்குப் பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு எனப் பல சுகாதாரப் பிரச்சினைகள். 

வயது கைவசம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆரம்பத்திலேயே கவனமாக இருந்திருந்தால் பல நோய்களைத் தவிர்த்திருக்கலாம். பிறருக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்தான். சுகாதாரப் பரிசோதனைகளுக்கு அடிக்கடி செல்லுங்கள். உணவுப் பழக்கவழக்கங்களில் கவனமாக இருப்பது முக்கியம்.

- சசிதரன்

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையால் பல இந்தியர்களிடையே உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை இன்றும் கவலையளிக்கும் அம்சங்களாக உள்ளன. இதற்கு நாம் என்ன செய்யலாம்?

ஆராய்கிறது வசந்தம் ஒளிவழியில் இன்றிரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரொலி!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்