Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வீட்டிலிருந்து விற்கப்படும் உணவு... பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளதா?

வாசிப்புநேரம் -

வீட்டிலிருந்து இயங்கும் உணவு வர்த்தகர்களின் எண்ணிக்கை கடந்த ஈராண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து உணவை விற்பனை செய்வதற்கு உரிமம் தேவையில்லை. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமில்லை.

உரிமம் பெற்ற உணவகங்களைப்போல், வீட்டிலிருந்து வியாபாரம் செய்வோரும் உணவைச் சுத்தமான முறையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்.

உணவங்காடிகள் கடைப்பிடிக்கும் விதிமுறைகளில் சிலவற்றை வீட்டிலிருந்து உணவு விற்போரும் பின்பற்றினால் நல்லது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அந்த விதிமுறைகளில் சில :
1.    உணவைக் கையாளுவோர் முகக்கவசம் அணியவேண்டும்

2.    உணவைக் கையாள்வதற்கு முன் அல்லது கழிவறைக்குச் சென்ற பிறகு தண்ணீர், சவர்க்காரம் பயன்படுத்திக் கைகளைக் கழுவவேண்டும்

3.    உணவைக் கையாளும் முன் கையுறைகளை அணியவேண்டும்

4.    உணவின் காலாவதித் தேதியில் அதிக கவனம் செலுத்தவேண்டும்

5.    உடல்நலம் சரியில்லை என்றால் உணவைக் கையாளக்கூடாது

6.    அனைத்து உணவுத் தயாரிப்பு மேற்பரப்புகளையும் பாத்திரங்களையும் தவறாமல் சுத்தம் செய்யவேண்டும்.

-       ஸ்ரீகிரண் ராகவன், வீட்டிலிருந்து இயங்கும் உணவு வர்த்தகங்களுக்கான வழிகாட்டி, Homefan SG

வீட்டிலிருந்து விற்கப்படும் உணவு எந்த அளவிற்குப் பாதுகாப்பானது என்பதைப் பற்றி ஆராய்கிறது, இன்றிரவு 9:30 மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்