நேரடி நிகழ்ச்சிகளை நடத்துவதில் நிதானம்... ஏற்பாட்டாளர்கள் தயங்குவது ஏன்?

கோவிட்-19 நோய்ப்பரவல் அதிகமாக இருந்தபோது, நமக்குப் பழக்கப்பட்ட அம்சங்களான நேர்காணல்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளக் கைகொடுத்தது தொழில்நுட்பம்.
நிகழ்ச்சிகளையும் இணையம்வழி பார்த்துப் பழகிவிட்ட மக்கள், இனி மீண்டும் நேரடியாக வருவார்களா என்ற சந்தேகம், பலரின் மனங்களில் எழுந்தது.
சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் நேரடி நிகழ்ச்சிகளை நடத்துவதில் இப்போதைக்கு நிதானமாகவே செயல்படுகின்றன.
"பெரியளவிலான நேரடி நிகழ்ச்சிகளில் அனுமதிச் சீட்டுகள் குறிப்பிட்ட அளவு விற்பனையானால் தான், ஏற்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட முடியும்.
அது இப்போது சாத்தியப்படுமா எனச் சிலர் யோசிக்கின்றனர்.
அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏதேனும் கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகிவிட்டால், அது ஒட்டுமொத்தத் தொழிலைப் பாதித்துவிடும் என்ற தயக்கமும் பலரிடையே உள்ளது."
என்றார் Dazzle Beatஇன் உரிமையாளர் செல்வா.

முற்றாக ஓயாத நோய்ப்பரவல் சூழல்…
உயர்ந்துவரும் விலைவாசி…
ஊழியர் பற்றாக்குறை…
இதுபோன்ற சவால்களை வர்த்தகங்கள் எப்படிச் சமாளிக்கின்றன?
அதுபற்றி ஆராய்கிறது, வசந்தம் ஒளிவழியில் இன்றிரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'எதிரொலி' நிகழ்ச்சி.