சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த இந்திய விளையாட்டாளர்கள்
சிங்கப்பூரின் வரலாற்றில் விளையாட்டாளர்களுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு.
முறையான காலணிகள் அணியாமல் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்தவர்கள்....
"உன்னால் முடியுமா?" எனும் கேள்விக்கு வெற்றிகள் மூலம் பதிலளித்தோர்.....
விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் சிறந்துவிளங்க முடியும் என்பதை நிரூபித்தவர்கள்.....
இப்படிப் பல விளையாட்டாளர்கள் நம் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தில் உள்ளனர்.
அவர்கள், தங்கள் வேகத்தையும் விவேகத்தையும் உள்ளூரில் மட்டுமல்லாது அனைத்துலகப் போட்டிகளிலும் காட்டிவருகின்றனர்.
அவர்களில் சிலரின் கதைகளை வசந்தத்தில் இன்றிரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள்.