Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

மாநிறமாக இருந்தால் என்ன?

வாசிப்புநேரம் -
"அழகு, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது" என்று பலர் கூறக் கேட்டிருப்போம்.

"கறுப்பாக இருந்தாலும் களையாகத்தான் இருக்கிறாய்."

"தொட்டால் ஒட்டிக்கொள்ளும் நிறம் உனக்கு!"

" நீ ஏன் இந்த நிறத்தில் ஆடை அணிந்திருக்கிறாய்? உன் தோலின் நிறத்துக்கு இது எடுப்பாகவே இல்லை!"

இப்படியும் சிலர் கூற நீங்கள் கேட்டிருக்கலாம்.

தோலின் நிறத்தை வைத்து ஒருவரைக் கேலி செய்வோரும் உண்டு. குறிப்பாகச் சமூக ஊடகங்களின் தாக்கத்துக்குப் பிறகு, ஒருவரின் வெளித்தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தன்னம்பிக்கையைப் பெரிதும் பாதிக்கும் இத்தகைய கருத்துகளை எப்படிச் சமாளிப்பது?

ஆற்றல்களுக்கும் அழகுக்கும் தொடர்பில்லை என்பதை எப்படிப் புரியவைப்பது?

மாநிறத்தால் மனத்தைப் புண்படுத்தும் கருத்துகளைச் சமாளித்தோர் தங்களின் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர் 'எதிரொலி' நிகழ்ச்சியில்.

இவர்களின் கதைகள், வசந்தம் ஒளிவழியில் இன்றிரவு 9.30 மணிக்கு இடம்பெறும் நிகழ்ச்சியில்...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்