அறிவார்ந்த தேசத்தை நோக்கிய சிங்கப்பூரின் பயணம்... பாதுகாப்பில் அதிகக் கவனம் தேவையா?

உலகின் சிறந்த அறிவார்ந்த நகரம் எனும் பட்டியலில் கடந்த மூவாண்டுகளாக முதல் இடத்தைச் சிங்கப்பூர் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
சுவிட்ஸர்லந்தைத் தளமாகக்கொண்ட நிர்வாக மேம்பாட்டுக் கல்வி நிலையமும் (IMD) சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் (SUTD) இணைந்து நடத்திய ஆய்வில் அது தெரிகிறது.

அறிவார்ந்த தேசத்தை நோக்கிய சிங்கப்பூர்ப் பயணத்தின் முக்கிய அம்சம் செயலிகள். அரசாங்கச் சேவைகளுக்கு Singpass, சுகாதாரத் தேவைகளுக்கு Healthhub, ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாலமாக இருக்கும் Parents Gateway, மின்னிலக்கக் கட்டண முறைக்கு Paynow... இது போன்ற பல செயலிகள் தினசரிப் பணிகளை எளிதாக்குகின்றன.
நாளுக்கு நாள் செயலிப் பயன்பாடு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உலகில் தற்போது சுமார் 2.56 மில்லியன் செயலிகள் உள்ளன. ஒருவரின் தொலைபேசியில் குறைந்தது நாற்பது செயலிகளாவது இருக்கும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இணைய மோசடி, அடையாளத் திருட்டு, வங்கிக் கணக்கு ஊடுருவல் எனச் சில சம்பவங்களை அண்மைக்காலமாக அதிகம் பார்க்கமுடிகிறது.
வெளிப்புறங்களில் இலவசமாகக் கிடைக்கும் Wifi எனும் இணையத் தொடர்புச் சேவைகளைத் தவிர்ப்பது நல்லதா?
இருக்குமிடத்தைக் காட்டும் புவியிடங் காட்டி முறை (GPS), கம்பியில்லா விரிவலைத் தொடர்பு (wireless) போன்ற சேவைகளை எப்போது பயன்படுத்தலாம்?
தெரிந்துகொள்ள, வசந்தம் ஒளிவழியில் இன்றிரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சியைக் காணத்தவறாதீர்கள்.