Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

நீடித்த நிலைத்தன்மை... அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவை

வாசிப்புநேரம் -

நீடித்த நிலைத்தன்மை! Sustainability! இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்தவாறு, வருங்காலத் தலைமுறையினருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதற்கு நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நீடித்த நிலைத்தன்மையைக் குறிக்கும்!

அடுத்த 10 ஆண்டுகளுக்கான சிங்கப்பூரின் பசுமை இலக்குகளைக் கொண்ட ‘பசுமைத் திட்டம் 2030’ சென்ற ஆண்டுத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

ஒரு தேசமாக ஒன்றிணைந்து நம் நாட்டை இன்னும் பசுமையாகவும் நீடித்த நிலைத்தன்மையைக் கொண்ட சமுதாயமாகவும் மாற்றுவது அதன் நோக்கம். 

இந்தத் திட்டத்தில் ஒன்று - இயற்கை எழில்மிக்க நகரம் என்ற அம்சம்.

சிங்கப்பூரின் பசுமை முயற்சி 1963ஆம் ஆண்டில் தொடங்கியது... மரம் நடும் இயக்கத்தினால் மில்லியன் கணக்கான மரங்கள் தீவு முழுவதும் நடப்பட்டன.

இந்த முயற்சி இன்னும் விரிவாக்கம் காணவுள்ளது. 

தீவு முழுவதும் மேலும் 1 மில்லியன் மரங்களை நடுவது இலக்கு.


பொதுமக்கள் தேசியப் பூங்காக் கழகத்தின் இணையத்தளத்திற்குச் சென்று விவரங்கள் பெறலாம். இலவசமாக மரங்களை நட்டு வைக்கலாம். பின்பு அந்த மரத்திற்குப் பெயரும் சூட்டி நம் நாட்டின் பசுமைத் திட்டத்திற்கு அவர்கள் கைகொடுக்கலாம்.

எதிரொலி நிகழ்ச்சியின் படைப்பாளர் சிவரஞ்சனி் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் ஒரு மரத்தை நட்டுவைத்தார்.

“மரம் நடுவது கடினமாக இருந்தாலும் என் நாட்டிற்காக நானும் ஒரு பங்கை ஆற்றியதில் மகிழ்ச்சி”

எனச் சொல்கிறார் சிவரஞ்சனி.

பசுமைப் பரப்பளவை அதிகரிப்பதற்குப் பல திட்டங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, சைக்கிளோட்டப் பாதைகளை 1320 கிலோமீட்டருக்கு விரிவுபடுத்துவது.

அண்மையில் திறக்கப்பட்டுள்ள ஆக நீளமான பொழுதுபோக்கு இணைப்பைப் பயன்படுத்தினார் 26 வயது திரு யோகேஷ்வரன் .

சுற்றுத்தீவுப் பாதையின் 75 கிலோமீட்டர் நீளமுள்ள பசுமைப் பாதை...சிலேத்தார் பகுதியிலிருந்து லாப்ரடோர் பூங்கா வரை அமைந்துள்ளது.

இதுபோன்ற நீடித்த நிலைத்தன்மைக்கான பல திட்டங்களையும் எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் அலசி ஆராய்கிறது இன்றிரவு 9.30 மணிக்கு வசந்தத்தில் ஒளிபரப்பாகும் எதிரொலி நிகழ்ச்சி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்