Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் 5 முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கு Sinovac தடுப்பூசி

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் 5 முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கு Sinovac தடுப்பூசி

(கோப்புப் படம்: AFP/Anthony WALLACE)

ஹாங்காங்கில் 5 முதல் 11 வயது வரையிலான பிள்ளைகள் Sinovac நிறுவனத்தின் COVID-19  தடுப்பூசியை அடுத்த வாரத்திலிருந்து போட்டுக்கொள்ள முடியும்.

நகரத்தில் 5ஆவது முறையாகக் கிருமிப்பரவல் சூழல் நிலவுவதால் தடுப்பூசி போடும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்துகின்றனர். 

5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 400,000 பிள்ளைகள் உள்ளனர்.

தற்போதுள்ள தடுப்பூசி நிலையங்கள், தனியார் மருந்தகங்கள் ஆகியவற்றில் அவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறந்தால் அவர்கள் அங்கேயும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்