Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தியப் பொதுவிருது பேட்மின்ட்டன்- சிங்கப்பூருக்கு ஒற்றையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம்

வாசிப்புநேரம் -

இந்தியப் பொதுவிருது பேட்மின்ட்டன் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், சிங்கப்பூரின் லோ கியென் இயூ (Loh Kean Yew), இந்தியாவின் லக்ஷ்யா சென்னிடம் (Lakshya Sen) வெற்றியைத் தவறவிட்டுள்ளார்.  

செட் விவரம் - 24-22, 21-17.

சிங்கப்பூருக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் லோ.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது.

சிங்கப்பூரின் டெர்ரி ஹீ (Terry Hee), டான் வேய் ஹான் (Tan Wei Han) ஜோடி மலேசியப் போட்டியாளர்களை வென்றது.

செட் விவரம்: 21-15, 21-18.

மலேசியாவின் சென் டாங் ஜீ (Chen Tang Jie), பெக் யென் வேய் (Peck Yen Wei) ஜோடியை 40 நிமிடங்களில் வீழ்த்தி ஆட்டத்தை வென்றது சிங்கப்பூர்.

திருமணமான ஹீ, டான் ஜோடிக்கு சுமார் 32,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்