Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இளஞ்சிவப்பு முகக்கவசங்களை அணியமாட்டோம் - இத்தாலியக் காவல்துறையினர் எதிர்ப்பு

வாசிப்புநேரம் -

இளஞ்சிவப்பு முகக்கவசங்களை அணிவதற்கு இத்தாலியக் காவல்துறைத் தொழிற்சங்கம் ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் சுமார் 20,000 SAP காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.

பிரிவுகள் சிலவற்றுக்கு சீருடையுடன் அணிவதற்கு இளஞ்சிவப்பு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அது காவல்துறையின் தோற்றத்தைப் பாதிக்கக்கூடும் என்று தொழிற்சங்கம் கூறியது.

சீருடையின் நடைமுறைகள் எப்போதும் பின்பற்றப்படவேண்டும் என்று காவல்துறைத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீருடைக்கு மேலும் பொருத்தமான நீலம் அல்லது வெள்ளை அல்லது கருப்பு வண்ணம் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

இருப்பினும் இளஞ்சிவப்பு முகக்கவசம் அணிவதால் மதிப்பு குறையும் என்று சொல்லமுடியாது என்றும் மதிப்பு, மரியாதை அதிகாரிகளின் செயலில் உள்ளது என்றும் அரசாங்க உறுப்பினர்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்