குறளும் பொருளும்
கை நனைத்தல்
உணவை உட்கொள்வதற்கு முன் கைகளைக் கழுவிவிட்டுச் சாப்பிடுவது இந்தியர்களின் வழக்கம்.
ஒருவர் மற்றவர் வீட்டில் கைகளை நனைத்தால் (கழுவினால்) நல்லுறவுடன் அவரது வீட்டின் விருந்து உபசரிப்பை ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள்படும்.
இருவருக்கு இடையிலான நல்லுறவைக் குறிக்க 'கை நனைத்தல்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
(எ.கா.) சான்றோர் மரியாதையுடன் நடத்தாதவர்கள் வீட்டில் கை நனைக்க மாட்டார்கள்.