Skip to main content

விளம்பரம்

பஞ்சாய்ப் பறந்தது

தமிழ் அறிவோம்

பஞ்சாய்ப் பறந்தது

காற்றைக் காட்டிலும் இலேசானது பஞ்சு. மிகக் குறைவான எடை கொண்டதும் கூட. எனவே ஓர் இடத்தில் பல பொருட்கள் இருந்தாலும், திடீரென காற்று வீசினால் முதலில் பஞ்சுதான் பறந்து செல்லும். வேகமாக, இலகுவாக மறைந்துபோகும் ஒன்றைக் குறிப்பிட இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. 

எ.கா.: விழாவை நடத்தித்தருவதாகத் தொண்டூழியர்கள் கூறியதும் செயற்குழுத் தலைவரின் கவலை பஞ்சாய்ப் பறந்தது. 

October 05 2022