Skip to main content

விளம்பரம்

சுமைதாங்கி

தமிழ் அறிவோம்

சுமைதாங்கி

அந்தக் காலத்தில் சுமை அனைத்தும் தலை மீது வைத்து கொண்டுசெல்லப்பட்டன. சுமையைக் கீழே இறக்கிவைத்தால், மீண்டும் மேலே தூக்கிவைக்க மற்றவர் உதவி தேவைப்படும். அப்படியின்றி தலையின் மட்டத்துக்கே வைத்து மீண்டும் தலையில் வைத்துக்கொள்ள ஏதுவாகச் சாலையோரங்களில் பயன்படுத்தப்படுத்தப்பட்ட கல்லுக்குச் சுமைதாங்கிக் கல் என்று பெயர். பிற்காலத்தில், எந்த ஒரு பாரத்தையும் முழுமையாகச் சுமப்பவரைக் குறிக்க அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.

எடு.:

சில வீடுகளில் ஒருவர் மட்டுமே சுமைதாங்கியைப் போல் இருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். 
 

July 21 2022