தமிழ் அறிவோம்
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
நினைத்தது எல்லாம் நடக்கும் என்று நினைத்துவிடாதே மனமே, எண்ணம் போல் வாழ்வு. எல்லாவற்றையும் கொடுக்கக்கூடிய கற்பக மரத்தை நாடினால்கூட அது நஞ்சுக்காயான காஞ்சிரங்காயைக் கொடுப்பது உண்டு. முதலில் நாம் செய்வதே பிறகு அந்தச் செயலுக்குப் பலனாக வருகிறது.
July 27 2025