Skip to main content

விளம்பரம்

கிள்ளுக்கீரை

தமிழ் அறிவோம்

கிள்ளுக்கீரை

கீரையை மொத்தமாகப் பறித்து ஒரே நாளில் பயன்படுத்தமுடியும். அப்படியில்லாமல் நுனிப் பகுதியை மட்டும் கிள்ளி அதைத் தொடர்ந்து நெடுநாட்களுக்குப் பயன்படுத்தவும் முடியும். அதன் காரணமாகவே தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்திக்கொள்ளப்படுவோரின் நிலையைக் கிள்ளுக்கீரையுடன் ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமானது. 

எ.கா: 
ஒருவர் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும் சில வேளைகளில் கிள்ளுக்கீரையைப் போன்று பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகலாம்.  

August 02 2022