தமிழ் அறிவோம்
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்....
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.
பெரிய இதழ்களைக் கொண்டது தாழம்பூ. ஆனால் சின்னஞ்சிறு இதழ்களைக் கொண்ட மகிழம்பூவில்தான் வாசனை உண்டு. சிறியவர் என்று யாரையும் எண்ணிவிட வேண்டாம். கடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் அதனால் பயன் இல்லை. சிறிய ஓடையில் ஓடும் நீரே குடிநீராகப் பயன்படுகிறது.
February 16 2025