தமிழ் அறிவோம்
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்...
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
நெல்லுக்குள் உமியும் அரிசியும் சேர்ந்திருக்கின்றன. அரிசிதான் முளைக்கிறது என்றாலும் உமி நீங்கிவிட்டால் அரிசி முளைப்பதில்லை. அதுபோல் எவ்வளவு பேராற்றல் கொண்டவரும் மற்றவர் உதவி இல்லாமல் எந்தப் பெரிய செயலையும் செய்து முடிக்கமுடியாது.
April 27 2025