தமிழ் அறிவோம்
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்....
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.
கொம்பும் கிளையும் கொண்டு காட்டில் நிற்கும் மரங்கள் நல்ல மரங்கள் அல்ல. சபையில் ஒருவர் நீட்டும் ஓலையை வாசிக்கமுடியாத படிப்பறிவு இல்லாதவரும் மற்றவரின் உள்ளக் குறிப்பை அறிய முடியாதவருமே நல்ல மரங்கள்!
May 11 2025