தமிழ் அறிவோம்
அடக்கம் உடையார் அறிவிலர் என்று...
அடக்கம் உடையார் அறிவிலர் என்று
எண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
அமைதியாக இருப்பவரைப் பார்த்து இவருக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து ஒதுக்கிவிடவேண்டாம். சிறுசிறு மீன்கள் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டுப் பெரிய மீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கு. அதைப்போலத்தான் அறிஞர்களின் அடக்கமும். காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
June 08 2025