தமிழ் அறிவோம்
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்...
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.
குளத்தில் நீர் வற்றிவிட்டால் பறவைகள் உணவுக்கு வேறு குளத்தைத் தேடிப் பறந்துவிடும். அதுபோல் துன்பம் வரும்போது நம்மைவிட்டு விலகிச் செல்பவர்கள் உண்மையான உறவுகள் அல்ல. குளத்தில் நீர் வற்றினாலும் அங்கேயே இருக்கும் நீர்க்கொடிகளும், அல்லியும் நெய்தல் மலரும் போல சிரமத்திலும் கூடவே இருப்பவர்கள்தாம் உண்மையான உறவுகள்.
June 22 2025