தமிழ் அறிவோம்
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று.....
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.
மனைவி இருந்தால் கணவனுக்கு இல்லாதது ஒன்றும் இல்லை. அது அமைதியான வீடாக இருக்கும். அவள் இல்லாமல் போனாலோ, எதற்கும் எதிர்த்துப் பேசுபவளாக இருந்தாலோ அந்த வீடு புலி பதுங்கியிருக்கும் புதர் போல் ஆகிவிடும். வீடு அச்சத்தைத் தரும்.
July 20 2025