தமிழ் அறிவோம்
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்......
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
நாட்டுக்கு மன்னராகவே இருந்தாலும் அவரைவிடவும் கல்வி கற்றவருக்குத்தான் அதிகச் சிறப்பு. மன்னருக்கு அவருடைய நாட்டில்தான் மதிப்பு. கற்றவருக்குச் சென்ற இடத்தில் எல்லாம் சிறப்பு.
October 26 2025