தமிழ் அறிவோம்
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி…
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.
ஒருவருக்கு உதவி செய்யும்போது இவர் ‘எனக்கு எப்போது திருப்பி உதவி செய்வாரோ?’ என்று நினைக்க வேண்டாம். வேருக்குக் கொடுத்த சாதாரண நீரைத் தலையில் சுமந்து வந்து இளநீராகத் தருகிறது உயர்ந்து வளர்ந்த தென்னைமரம். கொடுத்தது எதுவும் வீண்போவதில்லை.
January 22 2025