தமிழ் அறிவோம்
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா.....
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
உடன் பிறந்தவர்தான் உறவு என்று நினைக்கவேண்டாம். கூடவே இருந்து உயிரைப் பறிக்கிறது நோய். தூரத்தில் எங்கோ பெரிய மலைக்கு அப்பால் இருக்கிறது நோய்க்கு மருந்து. அதுபோலவே யாரோ ஒருவர் உயிரைக் காக்கும் உதவியைச் செய்துவிடக்கூடும்.
July 13 2025