தமிழ் அறிவோம்
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்- பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.
வேங்கை, வரிப்புலி போன்ற விலங்குகளின் நோயைத் தீர்க்கச்சென்ற மருத்துவர், நோய் குணமானதும் அந்த விலங்குகளுக்கே உணவாகிறார். அதுபோல் நன்றி மறக்கும் மனிதர்களுக்குச் செய்யும் உதவியும் கல் மேல் போடும் மண்பானை போன்றது, உடனே சிதறிப்போகும்.
June 07 2025