தமிழ் அறிவோம்
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம்.
நீரில் வளரும் அல்லி மலர் நீர்மட்டத்தின் உயரத்துகே பூத்திருக்கும். ஒருவர் படித்த நூல்களின் அளவே அவரது மதிநுட்பம் அமைந்திருக்கும். உழைப்புக்கு ஏற்பவே அமையும் செல்வம். ஒருவர் கொண்ட மரபுக்கு ஏற்பவே அவரது குணம் அமையும்.
March 30 2025