குறளும் பொருளும்
ஓட்டை வாய்
வாய் மூடியிருந்தால் மட்டுமே உள்ளே சுரக்கும் நீர் வெளியே வராமல் கட்டுப்படுத்த முடியும். அது திறந்திருந்தால் வாயிலிருந்து நீர் வழிந்துவிடும்.
ரகசியத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் வெளியில் சொல்பவர்களைக் குறிக்க இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துவர்.
எ.கா: ஓட்டை வாயாக இருப்பவரிடம் நெருங்கிய நண்பர்கள்கூட முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குவர்.