தமிழ் அறிவோம்
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்...
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-
நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர்
கரவார் கரவிலா நெஞ்சத் தவர்.
உள்ளே நஞ்சு இருப்பதால் கருநாகம் மறைந்து வாழும். நெஞ்சில் ரகசியம் உள்ளவர் மறைத்துப் பேசுவார். நீர்ப்பாம்பிடம் நஞ்சு இல்லை. எனவே அது வெளிப்படையாகச் சுற்றித் திரிகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லாதவர் வெளிப்படையாக நடந்துகொள்வார்.
September 28 2025