தமிழ் அறிவோம்
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு.
இளமையில் வறுமையும் முதுமையில் செல்வமும் வந்தால் அனுபவிக்க முடியாமல் போகலாம். அது காலம் தவறிப் பூக்கும் பூப் போன்றது. எதையும் உரிய காலத்தில் செய்யும்போது அதை ஆராதிக்க ஆள் இருக்கும். மதிக்கும் இடத்தில்தான் படைப்புக்கு மதிப்பு.
March 02 2025