தமிழ் அறிவோம்
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ? - கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து விளையுமோ தான்.
உரியவர் இடத்தில் உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்கள் எதிரியிடத்தில் சரண் அடைவார்களா? பலம் பொருந்திய கல்தூண் பாரத்தைத் தாங்கும், தாங்க முடியாவிட்டால் உடையும், ஒருபோதும் வளைந்து கொடுத்து இருந்துவிடலாம் என்று நினைப்பதில்லை.
March 23 2025