தமிழ் அறிவோம்
புளிப்புத் தட்டுதல்
அறுசுவைகளில் ஒன்று புளிப்பு. உணவில் புளிப்பு மிகுந்துவிட்டால், அதைச் சாப்பிடுவோர் முகம் சுளிப்பதைக் கண்டிருப்போம்.
அதனால் விருப்பமில்லாமல் போகும் ஒன்றை "புளிப்புத் தட்டுதல்" என்று கூறுவதுண்டு.
(எ-கா) பெரியவர்கள் ஓர் அறிவுரையை மீண்டும் மீண்டும் கூறும்போது இளையர்கள் சிலருக்குப் புளிப்புத் தட்ட வாய்ப்பிருக்கிறது.
November 11 2022