தமிழ் அறிவோம்
நாக்கு நீளுதல்
நாக்கு, பேச்சுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
திருவள்ளுவர் 'யாகாவா ராயினும் நா காக்க', 'நாவினால் சுட்ட வடு' என்று நாக்கைப் பேச்சுக்கு ஒப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
நாவடக்கம், நாவன்மை ஆகியவை பேச்சைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
வரம்பு மீறிப் பேசுவதை நாக்கு நீளம் என்று கூறுவதுண்டு.
(எ.கா) சிலர் முன்யோசனையின்றி நாக்கு நீளப் பேசி நண்பர்களின் வெறுப்புக்கு ஆளாவதுண்டு.
November 15 2022