Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முக ஒப்பனை முகக்கவசத்தில் ஒட்டிக்கொள்கிறதா? எப்படித் தவிர்ப்பது?

வாசிப்புநேரம் -

வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பது தற்போதைய காலக்கட்டத்தின் புதிய இயல்பு.

இருப்பினும், பண்டிகைக் காலத்தின்போது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கோ  நண்பர்களைச் சந்திப்பதற்கோ முக ஒப்பனை செய்துகொள்ளப் பலரும் விரும்பலாம்.

அப்போது, முகக்கவசம் அணிந்திருக்கையில், முக ஒப்பனை அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நிபுணர்கள் கூறும் சில குறிப்புகள்...

செட்டிங் ஸ்ப்ரே (setting spray) பயன்படுத்தலாம்.

முக ஒப்பனை செய்து முடித்த பின், சிறிதளவு செட்டிங் ஸ்ப்ரே திரவத்தை ஒப்பனைக்கு மேல் பயன்படுத்தலாம்.

அவ்வாறு செய்வது, ஒப்பனை அழியாமல், முகக்கவசத்தில் ஒட்டாமல் இருக்க உதவும்.

மேலும், முகத்தில் அதிகமாக ஒப்பனை பூசியதுபோல் இருந்தாலும் கூட அதைப் பயன்படுத்தலாம்.

அது முக ஒப்பனையை இயற்கையாகக் காட்ட உதவும்.

ஒப்பனை உத்தி

முக ஒப்பனை அதிக நேரம் நீடிக்க வேண்டுமென்றால், ஒப்பனைக்கு மேல் முகப் பவுடர் பூச வேண்டும்.

ஒப்பனை முகத்தோடு ஒன்றாக ஒட்டிக்கொள்ள அது உதவும்.

அதற்குப் பின்னர், ஒப்பனையின் இறுதியில், செட்டிங் ஸ்ப்ரே பயன்படுத்த வேண்டும்.

ஸ்ப்ரே தெளித்தவுடன், அது முழுமையாகக் காயும் வரை முகத்தை நகர்த்தாமல் இருக்க வேண்டும்.

சிரிக்கவோ பேசவோ கூடாது.

அவ்வாறு செய்வதன் மூலம், முக ஒப்பனை நீண்ட நேரம் நீடிப்பதோடு, முகக்கவசத்தில் ஒட்டாமலும் இருக்கும்.

நிறமற்ற முக பவுடர்

நிறமுள்ள பவுடருக்குப் பதில் translucent என்கின்ற நிறமற்ற முகப் பவுடர் பயன்படுத்துவது சிறந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்