Back Home

எங்களைப் பற்றி

மீடியாகார்ப் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தியைத் தொலைக்காட்சி வழி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. “செய்தி” செயலி/இணையத்தளம் – மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவின் மின்னியல் வடிவம்.

உடனுக்குடன் செய்திகள், சுவையான தகவல்கள், கண்ணைக்கவரும் படங்கள், காதுக்கினிய ஒலிவடிவங்கள், பார்த்து ரசிக்கக் காணொளிகள், உங்கள் படைப்புகள்....இப்படிப் பற்பல அங்கங்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு “செய்தி”

எங்கள் தொலைக்காட்சி செய்தி நாள்தோறும் இரவு 8.30மணிக்கு ஒளிபரப்பாகிறது. எங்கள் வானொலி செய்திகள் காலை முதல் இரவு வரை பல்வேறு நேரங்களில் ஒலிப்பரப்பாகின்றன. எங்கள் நடப்பு விவகாரப் பிரிவின் “எதிரொலி” நிகழ்ச்சி புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வெவ்வேறு தளங்களில் உங்கள் ரசனைக்கேற்ப செய்திகளையும் தகவல்களையும் தொகுத்து வழங்க, அனுபவமிக்க மூத்த செய்தியாளர்களும், துடிப்புமிக்க இளம் செய்தியாளர்களும் அன்றாடம் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

முகப்புப் பக்கத்தில் உள்ள ‘அஞ்சல்’ குறியீட்டை அழுத்தி, அதன் வழி நீங்களும் செய்திகளை அனுப்பி வைக்கலாம்.

செய்தியில் உங்கள் பங்களிப்பைப் பெரிதும் வரவேற்கிறோம். சமூகத்தின் செய்திகளை சமூகத்துக்காக, சமூகத்துடன் இணைந்து படைப்பது எங்கள் நோக்கம்!

Top