Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கொரியா: ஏவுகணைச் சோதனைப் பயிற்சி தொடக்கம்

தென்கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. வடகொரியா நேற்று புதிதாக நடத்திய அணுவாயுதச் சோதனைக்குப் பதிலடியாக சோல் அந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

தென்கொரியா கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. வடகொரியா நேற்று புதிதாக நடத்திய அணுவாயுதச் சோதனைக்குப் பதிலடியாக சோல் அந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

வடகொரியாவின் அணுசக்தித் தலத்தின்மீது தாக்குதல் நடத்துவது போன்ற பாவனைப் பயிற்சியில், தென் கொரிய ராணுவம் உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

யோன்ஹாப் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

பயிற்சியின்போது கிழக்குக் கடலில் இலக்குகளின்மீது தாக்குதல் நடந்தது. தென் கொரியாவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும், F-15 ரகப் போர் விமானங்களும் பங்குபெற்றன. அமெரிக்கப் படையினருடன் இணைந்து மேலும் பயிற்சிகளுக்குத் தயாராகி வருவதாகத் தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்