Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெண்ணையும் குழந்தையையும் கீழே தள்ளிய சீனக் காவல்துறை அதிகாரி

சீனாவின் ஷங்காய் நகரில், காவல்துறை அதிகாரி தாயையும் பிள்ளையையும் கீழே தள்ளியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங்: சீனாவின் ஷங்காய் நகரில், காவல்துறை அதிகாரி தாயையும் பிள்ளையையும் கீழே தள்ளியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குடிமக்களின் மீதான அதிகாரிகளின் வன்செயல்கள் குறித்த விவாதங்களுக்கும் அந்தச் சம்பவம் வித்திட்டது.

சட்டவிரோதக் கார் நிறுத்தம் தொடர்பில் அந்தக் காவல்துறை அதிகாரி சோதனை நடத்தியபோது அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் அவர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் மோசமாகி, அந்தப் பெண், கையில் பிள்ளையை வைத்துக்கொண்டே காவல் அதிகாரியை மார்பில் பல முறை தள்ளியதைக் காணொளிப் பதிவு காட்டியது.

சற்று நேரத்திற்குப் பிறகு, அதிகாரி, அந்தப் பெண்ணையும் அவரது பிள்ளையையும் சேர்த்துக் கீழே தள்ளியது கணொளியில் பதிவானது.
பெண்ணின் கையிலிருந்து பிள்ளை விழுந்தது. அழுதுகொண்டிருந்த பிள்ளைக்கு வழிப்போக்கர் ஒருவர் உதவி செய்ததும் காணொளியில் தெரிந்தது.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகச் சீனச் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்தது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்