Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் விமானப் பயணிகளுக்குத் தடை விதிக்கவுள்ளது இந்தியா

ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் விமானப் பயணிகளுக்கு இந்தியா தடை விதிக்கவுள்ளது. அவ்வாறு நடந்து கொள்ளும் பயணிகளுக்குக் குறைந்தபட்சம் 3 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகளுக்கு மேல் வரை விமானத்தில் பயணம் செய்யத் தடை விதிக்கப்படலாம். 

வாசிப்புநேரம் -
ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் விமானப் பயணிகளுக்குத் தடை விதிக்கவுள்ளது இந்தியா

படம்: AFP

ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளும் விமானப் பயணிகளுக்கு இந்தியா தடை விதிக்கவுள்ளது. அவ்வாறு நடந்து கொள்ளும் பயணிகளுக்குக் குறைந்தபட்சம் 3 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகளுக்கு மேல் வரை விமானத்தில் பயணம் செய்யத் தடை விதிக்கப்படலாம். அவர்களது நடத்தையின் தீவிரத்தைப் பொறுத்துத் தடைக்காலம் தீர்மானிக்கப்படும்.

புதிய விதிமுறைகள் வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்வோருக்கும் பொருந்தும். வாய்மொழி வழி மற்றும் உடல்ரீதியாக வதைப்பது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது என வெவ்வேறு விதமாக ஒழுங்கற்ற நடத்தை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை முன்னிட்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்